உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

அநுர அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
51 பார்வைகள்

இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள், மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

சமீபத்திய ‘வெரிடே ரிசர்ச்’ ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின் செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன், பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலே உள்ளனவே தவிர உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல.

தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு முயல்கின்றது. இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும் நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

22ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடிய நீதி அமைச்சர், “எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது, அரசுடன் விளையாட வேண்டாம்” எனக் கூறித் தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும் இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடை; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

கடந்த சில நாட்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர். அத்துடன்…

21 0 0
இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!

பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில்…

37 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

65 0 0
இலங்கை செய்திகள்

அன்று எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்தவர்கள் இன்று அவற்றின் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றார்கள்.!

அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் முதன்மை மையங்கள் எனத் தங்கள் வாயாலேயே…

65 0 0