உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நைஜரில் கலவரம் : கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு!

உலக செய்திகள் 1 வாரம் முன்
71 பார்வைகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் அரசுத் தளங்களுக்கு அருகில் பல மணி நேரங்களாகத் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளும் வெடிச்சத்தங்களும் கேட்டதைத் தொடர்ந்து அங்கு நடந்த கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ராணுவத் தலைமை அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த சனிக்கிழியன்று தியோரி ஹமானி வானூர்தி நிலையத்தில் உள்ள ராணுவத் தளம் மீது கிளர்ச்சிப் படையினர் முதன்முதலில் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சி நிலையமும் ஜனாதிபதி மாளிகையும் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளன.

எனினும், பாதுகாப்புப் படையினர் படிப்படியாக நிலைமையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்ததாகவும் கிளர்ச்சியாளர் படையைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டனர் என்று அரசத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய நைஜரின் ராணுவத் தலைமை நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவதில் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் ராணுவ ஆட்சியாளரும் ஜனாதிபதியுமான ஜெனரல் அப்துரஹ்மான் சியானி தனது நாட்டின் போக்கை மேற்கத்திய நாடுகளிடமிருந்தும் குறிப்பாக நாட்டின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சிடமிருந்தும் விலக்கிக் கொண்டார்.

ஆயுதக் குழுக்களிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர் ரஷ்யாவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் அல்-கொ மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதைத் தடுத்து நிறுத்த இது உதவவில்லை.

இந்தநிலையிலேயே தற்போது அங்கு கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் தலைநகர் நியாமிக்கு வெளியேயுள்ள பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக நைஜரின் தென்மேற்குப் பகுதிகளைச் சேர்ந்த இளம் வீரர்களே இந்த இருந்ததாகத் தெரிய வருகிறது.

கிளர்ச்சியாளர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அதற்குத் தலைமை தாங்கியது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஆனால் முன்களப் படையினர் இதில் ஈடுபட்டிருப்பது ராணுவத்திற்குள் அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!

வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.…

124 0 0
உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

93 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

131 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

98 0 0