உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

தமிழக அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

இந்திய செய்திகள் 1 மணி நேரம் முன்
37 பார்வைகள்

2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் இதற்கு உடன்படாவிட்டால் அல்லது ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழக அரசாங்கத்தில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகி விடுவோம் என்று அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட அமைச்சர் பதவியை விட காங்கிரஸ் கட்சியும், அதன் கொள்கைகளும், ராகுல் காந்தியும் தான் தங்களுக்கு முக்கியம் என்றும், கட்சிக்காக எந்தக் கணத்திலும் பதவியைத் துறக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைத்துள்ள நிலையில், எதிர்காலப் பிரதமர் விஜய் தான் என்று அந்தக் கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் பேசிவரும் சூழலில், காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமாரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள…

72 0 0
இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

89 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

55 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

101 0 0