உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

யாழில் மின்சாரம் தாக்கி அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 27 நிமிடங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா என்பவரே உயிரிழந்துள்ளார்.

அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது.!

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

34 0 0
இலங்கை செய்திகள்

ரணில் விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார் அநுர.!

இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது…

41 0 0
இலங்கை செய்திகள்

எம் உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் எமக்கான விடுதலைக் கதவுகளை திறக்கும்.!

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின்…

38 0 0
இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

47 0 0