உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 நாட்கள் முன்
99 பார்வைகள்

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று (30) மிக விமர்சையாக இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் விசேட அழைப்பின் பேரில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் நீச்சல் தடாகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பல இடங்களுக்கும் களவிஜயங்களை மேற்கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், காரைதீவு சண்முகா வித்தியாலய மைதானக் காணிப் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானங்கள், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகம் ஆகியவற்றுக்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற இந்த விழாவில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் என்.எம். நௌபீஸ், அம்பாறை மாவட்ட பொறியியலாளர் சாஹீர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், மாநகர சபை அதிகாரிகள், விளையாட்டுத் துறை பிரதிநிதிகள் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…

144 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

91 0 0
அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

77 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

60 0 0