உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

காஸா அமைதிச் சபை தோல்வி! : சர்வதேச அமைப்புகள் கவலை!!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
53 பார்வைகள்

காஸாவில் நாளாந்தம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் அமெரிக்க அதிகாரிகள் தலைமையிலான காஸா அமைதி சபை (Gaza Board of Peace) தவறிவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச உதவி நிறுவன சங்கத்தின்(AIDA) பணிப்பாளர் அதீனா ரேபார்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 2803ஆவது தீர்மானம் மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது.

எனினும், அமைதி சபையோ அல்லது அனைத்து நாடுகளின் படை உறுதிப்பாடுகளே காஸா விடயத்தில் செயற்படவில்லை.

இந்தநிலையில், நீண்டகால அடிப்படையில், இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படுகிறதா என்பதை, அமைதி சபை தீர்மானிக்க வேண்டும்” என்று ரேபார்ன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அடிப்படை அளவுகோல்களின்படிப் பார்த்தால், அமைதி சபை முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது என்று சர்வதேச உதவி நிறுவன சங்கத்தின்(AIDA) பணிப்பாளர் அதீனா ரேபார்ன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சூடான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அழுத்தம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய…

60 0 0
உலக செய்திகள்

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க…

55 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டது அமெரிக்கா!

இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாலஸ்தீன நடவடிக்கை’ (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,…

48 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : உதவிக்கரம் நீட்டத் தயாராகும் ஐக்கிய நாடுகள் சபை

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய…

40 0 0