உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மானிப்பாய் சபைக்கு நெருப்புச் சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
128 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன்,
கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றனர்.

நேற்றும் கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும், பல திணைக்களங்களிலும் பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதன் மூலம் மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாக நான் இன்று பொலுத்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள் வந்தேன். எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக வெளிப்படுத்துகிறேன்.

குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்தவிதமான நகர்களையும் தவிசாளர் முன்னெடுக்கவில்லை.

யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை போகின்றார் போல் தெரிகிறது. அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

61 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

76 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0