யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை; பலரது கண்கள் பாதிப்பு.!
யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் அதிகளவான ஒளி பயன்படுத்தப்பட்டதால் பலரது கண்கள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆலயத்தின் வளாகமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
இதில் அலங்கரிக்கப்பட்ட பார்வைக்கு ஆரோக்கியமற்ற மின் விளக்குகளால் இதுவரை ஏறக்குறைய 35 பேருக்கு இன்று காலை கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.
மேலும், குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்றவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று கண் பரிசோதனை செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.