உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நியூசிலாந்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் குழு மன்னார் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
195 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (20) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து உரையாடி உள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்த குறித்த குழுவினரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் அவர்களின் குறித்த செயல்பாட்டை பாராட்டிய அரசாங்க அதிபர் புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் பிறந்த நாட்டையும், மாவட்டத்தையும் நேசித்து மன்னார் மாவட்ட மக்களுக்காக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக குறித்த குழுவினருக்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று நாட்கள் மேற்கொண்ட இலவச மருத்துவ முகாமில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கில் மேற்கொள்ளப்பட்ட குறித்த மருத்துவ முகாம் ஊடாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். பின்தங்கிய கிராம மக்களும் பயனடைந்துள்ளனர். எனவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச அதிபர் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் மன்னார் உப்புக்குளம், விடத்தல் தீவு மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக இலவச மருத்துவ முகாமை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0