உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
164 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சமுர்த்தி வங்கியின் களஞ்சிய அறை திறப்பும் சமுர்த்தி உதவித்திட்டங்கள் வழங்கல் நிகழ்வும் இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கினைப்புக் குழுத் தலைவருமான கருணைநாதன் இளங்குமரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீலங்கா பச்சிலைப்பள்ளி பிரதேச இணைப்பாளர் தேவநாயகம் சுஜீபன், பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் கேதீஸ்வரநாதன் ஜெனகசிவசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1.6 மில்லியன் ரூபாய் செலவில் வங்கிக்கான களஞ்சிய அறை அமைக்கப்பட்டது. 27 பேருக்கு 150,000 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் “சிப்தொற” புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கு 2026-2028 கல்வியாண்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் “சவிபல” கடன் திட்ட பயனாளிகள் இருவருக்கு காசோலையும் வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0