மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புதிய பிரதிப் பணிப்பாளர் கடமையேற்பு.!
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பணிப்பாளர் சூரிய ராஜா நேற்று திங்கட்கிழமை (10) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
