சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு அலுவலகம் திறந்து வைப்பு.!
மன்னாரில் சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு (SMIO) அலுவலகம் இன்று திங்கட்கிழமை (10) காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பெற்றா பகுதியில் குறித்த அலுவலகம் சர்வமத தலைவர்கள் ஆசியுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சமூக நலம், மனிதநேயப் பணிகள் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் வகையில் குறித்த சமூக முன்னேற்ற முன்முயற்சிக்கான அமைப்பு இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





