சற்றுமுன் சாகர காரியவசம் கைது.!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று(10) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்