உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
116 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பக்கிஎல்லை சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இச்சோதனையின்போது 7,500 மி.லீ கள்ளச்சாராயம், 148,000 மி.லீ கோடா, சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் செம்புச் சுருள்கள் மற்றும் பீப்பாய்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த காட்டுப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் எனக் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அம்பாறை 2 ஆம் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திசாநாயக்க மற்றும் பக்கிஎல்லை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயரத்ன ஆகியோரின் ஆலோசனையில், ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த அதிரடி சோதனையை செய்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0