உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
139 பார்வைகள்

முழு நாட்டையும் அழகுபடுத்தும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (8) ஆரம்பமாகியுள்ளது.

ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (8) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை சூழலை முழுமையாக சுத்தப்படுத்துகின்ற குறித்த வேலைத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வைத்தியசாலை பணியாளர்கள், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட பணியாளர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படையினர் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாங்கள் வாழ்கின்ற பிரதேசத்தை நாங்கள் தூய்மையாக வைத்திருக்கின்றோம் என்ற அடிப்படையிலும், கூட்டுணர்வு செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0