உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
91 பார்வைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் தேசிய கல்லூரியில் தரம் 6 மற்றும் 7இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ‘aTd’ (Adult Tetanus and Diphtheria) தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்  புதன்கிழமை (05) இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார செவிலியர், பொதுச் சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை வழங்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்குப் பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

எதிர்கால சந்ததியினரைக் கொடிய தொற்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் தேசிய ரீதியில் இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் பாடசாலைகள் தோறும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தாடைப் பூட்டு (Tetanus) நோயிலிருந்து பாதுகாப்பு: காயங்கள், துருப்பிடித்த இரும்பு உலோகம் மற்றும் அழுக்குகள் மூலம் பரவி, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் “Lock Jaw” எனப்படும் ஆபத்தான டெட்டனஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.தொண்டி அடைப்பான் (Diphtheria) நோய் தடுப்பு: தொண்டை மற்றும் சுவாசப் பாதையைக் கடுமையாகப் பாதிக்கும் பாக்டீரியா தொற்றைத் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு: பாடசாலைப் பருவக் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, சமூக அளவில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் இத்தடுப்பூசி பெரிதும் உதவுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

42 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0