உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 38 நிமிடங்கள் முன்
48 பார்வைகள்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா மங்கள விக்ரமாராச்சியை, சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் இன்று (25) நேரில் சந்தித்துக் கௌரவித்ததுடன் இக்கோரிக்கையையும் முன்வைத்தனர்.

ஏனைய மாவட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, அம்பாறை மாவட்டத்திலும் அரச காணி ஒன்றில் மாதிரி வீட்டுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரச அதிபர், எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்து, உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தினர் ‘இன்றைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஊடகவியலாளர்கள் தமது பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். எனவே தகுதியான ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், தேசிய அமைப்பாளர் எம்.வை. அமீர், செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப செயலாளர் என்.எம். அப்ராஸ் மற்றும் உப தலைவர்களான எஸ். தஸ்தகீர், எம்.எம். ஜபீர், உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

78 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

122 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

90 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

86 0 0