உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற தரங்கவுக்கு விமானப்படையால் பதவி உயர்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
52 பார்வைகள்

சமீபத்தில் நிறைவடைந்த பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச் விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வு இன்று விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

50 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0