உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
117 பார்வைகள்

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹொரண பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மில்லனிய – படகொட வீதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பாக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரனைப் பார்க்கச் செல்வதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, பொலிஸார் மோட்டார் சைக்கிளையும் சந்தேகநபர்களையும் சோதனையிட்டனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு சோற்றுப் பார்சல்களுக்குள் இருந்த மிளகாய் சம்பல் சிறிய பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடம் இருந்த கைப்பேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

50 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0