உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
56 பார்வைகள்

மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ‘ஹாஷிஷ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொனஹேன முகாமின் விசேட அதிரடிப்படை உளவுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேகநபரை வழிமறித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 06 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் முதலில் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 06 கிலோகிராம் ஹாஷிஷ் கண்டெடுக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0