உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பு மாரத்தான் 2026; உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
105 பார்வைகள்

‘அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும் ‘கொழும்பு மாரத்தான் 2026’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையை உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் முதன்மைப்படுத்தும் நோக்கிலும், கொழும்பு நகரை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலகப் புகழ்பெற்ற நகர மாரத்தான்களின் மாதிரியில் திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டி, விளையாட்டு சிறப்பையும் சுற்றுலா மேம்பாட்டையும் ஒன்றிணைத்து நாட்டிற்கு நீண்டகால நன்மைகளைத் தரும் என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்நிகழ்வில் கொழும்பு மாரத்தான் 2026 இலச்சினையைக் கொண்ட எல்.பி.எல் ஜப்னா கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சீருடையும் வெளியிடப்பட்டதுடன், அணியின் தலைவர் பானுக ராஜபக் ஷ நினைவுச் சீருடையை அமைச்சரிடம் கையளித்தார்.

முழு மாரத்தான் (42.195 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.), 10 கி.மீ. வீதி ஓட்டம், 5 கி.மீ. பொழுதுபோக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மினி ரன் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இப்போட்டியில் 4,000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தடகள தரநிலைகளுக்கு அமைய, சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்களின் மேற்பார்வையிலும் இலங்கை தடகள சங்கத்தின் 100 சான்றளிக்கப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டலிலும் போட்டிகள் துல்லியமாக நடத்தப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

50 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

32 0 0