புகையிரத தண்டவாளத்தில் இருந்து ச*டலம் மீட்பு.!
பிரதான புகையிரத மார்க்கத்தில் கம்பஹா மற்றும் தாரலுவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரத தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
தண்டவாளத்தில் சடலம் காணப்பட்டது குறித்து பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளால் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சடலம் அகற்றப்பட்டு, பொலிஸாரின் முதற்கட்ட சட்டப்பூர்வ விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதான மார்க்கத்திலான புகையிரத இயக்கங்கள் தாமதத்துடனேயே முன்னெடுக்கப்படும் என புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.