உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முல்லைத்தீவு, மன்னார் பொது மருத்துவமனைகளில் CT, MRI இயந்திரங்கள் இன்மையால் நோயாளர்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
115 பார்வைகள்

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மருத்துவமனைகளில் CT, MRI இயந்திரங்கள் இன்மையால் நோயாளர்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளுக்கு துரிதகதியில் CT, MRI இயந்திரங்ளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு விரைவில் CT இயந்திரம் வழங்கப்படுமெனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, முல்லைத்தீவு மாவட்ட பொதுமருத்துவமனைக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் CT, MRI இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றில் 04.08.2026 இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னாரில் CT ஸ்கேனர் வசதி ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்திலும் CT ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு நோயாளர்கள் அவதிப்படுகின்றார்கள்.

குறிப்பாக பல நூற்றக்கணக்கான நோயாளர்கள் CT ஸ்கேன் இற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சென்றுவரவேண்டிய நிலையே காணப்படுகின்றது.

எனவே இந்த CT ஸ்கேனர் வசதி முல்லைத்தீவில் ஏற்படுதப்படவேண்டுமெனப் பாதிக்கப்படுகின்ற மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் – என்றார்.

இதன்போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளிக்கையில்,
நாங்கள் மன்னாருக்கான CT இயந்திரத்தை விரைவில் வழங்குகிறோம்.

அதேபோல் முல்லைத்தீவில் எங்களது புதிய மருத்துவ விடுதி வளாகக் கட்டுமானப் பணிகளை இந்த வருடம் நவம்பர் மாதமளவில் ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.

இப்போது நாங்கள் எதிர்வரும் ஆண்டுக்காக CT, MRI உள்ளிட்ட இந்த உபகரணங்களுக்காகத் தயாரித்துள்ள பட்டியலைச் சில மதிப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

ஜனாதிபதியுடன் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போதும் இந்த அவசியமான உபகரணங்களை ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சு கவனம் செலுத்தியது.

அதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பாகவும், நாங்கள் எதிர்வரும் ஆண்டில் பொதுவாக எமக்கு மூன்றாவது காலாண்டு அளவில் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் எனப் பதிலளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0