உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யானை தாக்கி உணவக ஊழியர் ஒருவர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
76 பார்வைகள்

அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையின் உணவக ஊழியர் ஒருவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அவருடன் சென்ற மற்றைய நபர் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0