உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மோட்டார் சைக்கிள்களுக்காக தனிப் பாதைகள்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
94 பார்வைகள்

நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் முன்னோடி நடவடிக்கை களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாக பதிவாகி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதைகளை அமைப்பது அமையும் எனக் கூறினார்.

இலங்கையில் ஆண்டுதோறும் வீதி விபத்துகளில் சுமார் 2,500 பேர் உயிரிழப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 2,750 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,400 மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்தவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு மோட்டார் சைக்கிள் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

42 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

58 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

54 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0