உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிளிநொச்சியில் பொதுமக்கள் தமது பூர்வீகக் காணிகளை துப்புரவு செய்வதற்கு வனஜிவராசிகள் திணைக்களம் முட்டுக்கட்டை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
126 பார்வைகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்  பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன ஜிவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதுடன் அவற்றை சுவிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல் பகுதியில் அதாவது ஆனையிறவு வெற்றிலைக் கேணி  பிரதான வீதியில் மேற்கு புறத்தில் உள்ள குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக பயிர்செய்கை மேற்கொண்டும் வசித்தும்  வந்துள்ளனர்

இவ்வாறான தனியார் காணிகளுக்கு ஆவணங்கள் கடந்த 1911 ஆம் ஆண்டுகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு  ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் மற்றும்  வெற்றிலைகேணியில் இருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பகுதி மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து தமது வாழ்வாதாரங்களை கைவிட்டு சென்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைபெற்றதன் பின்னர் வெடி பொருள் ஆபத்தான  பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு வரையும் வெடிப்பொருள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தற்போது குறித்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் குடியேறுவதற்கு அல்லது பயிர் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால்  தடை ஏற்பட்டு வருகின்றது

குறிப்பாக கடந்த 1911 ஆம் ஆண்டும் அதற்கு முன்னருமான   காணி ஆவணங்கள் கொண்ட பாதிரியார் தோட்டம் ஆலங்காட்டு பள்ளம் கருப்பங்காடு ஆகிய பெயர்களைக் கொண்ட தனியாருக்கு சொந்தமான  தென்னை  பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தும் நோக்கில் குறித்த காணி உரிமையாளர்களை அவர்களது காணிகளை  துப்புரவு செய்யவிடாது தடுத்து வருவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தும் வருகின்றனர்.

குறித்த  காணிகளில் தொன்று தொட்டு ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தமைக்கான   காணி ஆவணங்கள் தோட்டச் செய்கைகளுக்காக முண்ணைய காலங்களில் வெட்டப்பட்ட கிணறுகள் வீடுகள் கட்டிடங்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் போரில் எஞ்சியுள்ள பனை தென்னை மா போன்ற பயன் தரும் மரங்கள் என்பன சாட்சியாக உள்ளன .

இருந்தபோதும் இவ்வாறு வனஜீராசிகள் திணைக்களம் தனது காணிகளை துப்புரவு செய்யவிடாது தடைகளை ஏற்படுத்தி அவற்றை சுபிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பாதிpக்கப்பட்ட மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0