உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சீரற்ற வானிலைக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
83 பார்வைகள்

நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.

“உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும்.

எனினும் பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும். எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும்.” என்றார்.

எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0