உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மீனவர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
58 பார்வைகள்

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் இன்று (1) சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன்பிடிக்க கண்ணாடியிழை படகில் சென்ற இரு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான வலையை கடலில் பாய்ச்சி விட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரிபொருளை எடுத்து வரலாம் என்னும் நோக்கில் குறித்த மீனவர் கடலில் குதித்து நீந்தி கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் காட்டாஸ்பத்திரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற சக மீனவர்கள் கடலில் தத்தளித்து நின்றதாக கூறப்படுகின்ற குறித்த படகையும் மீனவரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.

மேலும் எரிபொருளை பெற்றுக் கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற நிலையில் காணாமல் போன சக மீனவரையும் தேடியுள்ளனர். குறித்த மீனவர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம் பிட்டி மீனவர்கள் இன்று சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்டாஸ்பத்திரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி மீனவர்கள் தேடிச்சென்று குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0