உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு பொலிஸார் ஆப்பு; மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
127 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவு வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடிச் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மற்றும் சட்டவிரோதமாக உருமாற்றம் (Modify) செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களைத் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்தமை, தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, வாகன இலக்கத்தகடுகள் இன்றிப் பயணித்தமை, பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது வீதிகளில் பிறருக்கு இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவோருக்கு எதிராக இத்தகைய அதிரடிச் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் கருத்திட்டத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவான் தந்தநாராயணவின் நெறிப்படுத்தலிலும் நிந்தவூர் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எஸ் நிசாந்த வெதகே தலைமையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

84 0 0