உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணி விடுவிப்பு தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
89 பார்வைகள்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் என்றும், அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனவும், இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், மீண்டும் காணிகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இவ்விடயத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.

அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் செ. விஜயராஜ், வலி. மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. சபேசன் மற்றும் காணி விடுவிப்புச் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

68 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

80 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

71 0 0