உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
85 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன் புராதனத் தன்மை அழியாதவாறு அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்காலத் திட்ட ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

இது தொடர்பான விசேட விளக்கங்களை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இந்தக் களப் பயணத்தின் போது, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கௌரவ அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்குப் பயணம் செய்தனர். அங்கு அவர்களுக்கு யாழ். மாநகர சபையின் கௌரவ பிரதி மேயர், ஆணையாளர் மற்றும் பிரதம நூலகர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

பொது நூலகத்தின் செயற்பாடுகளைச் சுற்றிப் பார்வையிட்ட அதிதிகள், கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நூலகத்தின் அபிவிருத்திக்கென மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அவர்களால் விசேடமாக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் கீழான வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்தச் செயற்றிட்டங்கள் தொடர்பில் பிரதம நூலகரால் அதிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், குறித்த திட்டத்தின் கீழ் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகளையும் அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் இதன்போது நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

26 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

26 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

27 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

30 0 0