உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
133 பார்வைகள்

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் உரிய துறைசார்ந்த அதிகாரிகளிடமும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதன்பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளித்துள்ளார்.

நடாளுமன்றக் குழு அறையில் 21.07.2026 இன்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – மயிலிட்டி, மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தக்கூடியவாறு நிலைமைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக 1973ஆம் ஆண்டு அப்பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயரும்வரை, அப்பகுதியைச் சேர்ந்த 1000வரையான மீனவ குடும்பங்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தினைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த மயிலிட்டித் துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியாதநிலை காணப்படுகின்றது.

இது தொடர்பில் அங்குள்ள மீனவர்கள் என்னிடம் முறையீடு செய்ததற்கமைவாக கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.

எல்லைதாண்டி அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும்போது பறிமுதல் செய்யப்பட்ட இந்திய இழுவைப் படகுகள் மயிலிட்டித் துறைமுகத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வாறு துறைமுகத்தில் இந்திய இழுவைப் படகுகள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற பகுதி தவிர்ந்த மிகுதிப் பகுதியை தென்னிலங்கை மீனவர்களே பயன்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் என்னிடம் முறையீடு செய்தனர்.

எனவே, எமது தமிழ் மீனவர்களுடைய வயிற்றில் அடிக்கவேண்டாமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

துறைமுகத்தின் அருகில் இருக்கும் எமது மீனவர்கள் அந்தத் துறைமுகத்தினைப் பயன்படுத்த முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம். எமது மீனவர்களும் தமது அன்றாட வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.

எனவே தயவுசெய்து மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை உரியவகையில் அப்புறப்படுத்தி, அப்பகுதி மீனவர்கள் துறைமுகத்தினை தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இந்நிலையில் இதன்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக பதிலளிக்கையில்,

இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் சார்ந்த அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

எனவே அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பிற்பாடு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் அனுர கருணாதிலக இதன்போது பதிலளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

52 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

44 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

59 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

70 0 0