உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! – 23 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
147 பார்வைகள்

குருநாகல் மாவட்டம், நிக்கவெரட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாகப் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

54 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

45 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

44 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

82 0 0