உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

செம்மணி போராட்ட களத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
34 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு வருகை தந்தனர். இதன்போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களது படங்களை தாங்கிய பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அந்த படங்கள் தாங்கிய பதாகைகளை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் பதிவு செய்யும்போது அதனை மறைக்கும் வகையில் பொலிஸார் குறுக்கே நின்றனர். இதன்போது அவற்றை மறைக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு கூறிய நிலையிலும் அவர்கள் அங்கிருந்து நகராமல் நின்றதால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.

பின்னர் பொலிஸார் அங்கிருந்து நகர்ந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த சஜித்!

செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச் சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்…

58 0 0
இலங்கை செய்திகள்

கன்னியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய கட்டுமானம் – நீதிமன்றத் தடையை மீறி அடிக்கல் நாட்டியது தொல்பொருள் திணைக்களம்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அவ்விடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆரத்தழுவி கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்  – செம்மணியில் உருக்கமான தருணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை…

86 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா மாநகர சபை ஊழியர்கள் இன்று அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும்,  இன்று மாநகர அலுவலகத்தை மூடி, பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் பொது சந்தை வீதியில் நடைபாதை…

37 0 0