உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
155 பார்வைகள்



யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்றையதினம் குறித்த தனியார் பேருந்து புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது. அந்த பேருந்தில் அண்ணளவாக 60 பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்தானது வேலணை – அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார்.

இதன்போது பேருந்து அவ்வாறே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக செல்வதை நடத்துனர் அவதானித்து விட்டு சாரதியை பார்த்தவேளை அவர் மயக்கமுற்ற விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட நடத்துனர் பேருந்தை நிறுத்திவிட்டு சாரதியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

89 0 0
இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

84 0 0
இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

89 0 0
இலங்கை செய்திகள்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில்…

72 0 0