உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
137 பார்வைகள்

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை தொடர்பாக, பாராளுமன்றத்திலும் வீதியிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி போராட்டம் நடத்தப்பட்டது.

பிரதமர் இல்லம் எதிரிலேயே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

மாலை சுமார் 6:40 மணி அளவில், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் சென்றது.

இந்தத் திடீர் கைது நடவடிக்கையால் புதுடெல்லியின் முக்கியப் பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0