உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்த நடவடிக்கை.!

81 பார்வைகள்

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 303 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொதுக் கல்விக்காக 160 பில்லியனும், உயர்கல்விக்காக 122 பில்லியனும் மற்றும் தொழிற்கல்விக்காக 20 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மாத்திரம் அவற்றை செலவிடாமல், தேசிய தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இனங்கண்டு நிதியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினமான 08 பில்லியன் ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தின் கீழ் செயற்படும் 310 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு காலாண்டுகளில் 57,959 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர காணி ஒன்றை வழங்குவது குறித்தும், வாழ்க்கைத் தொழில்சார் தொழினுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைச் இணைத்துக்கொள்வதை அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி, பிராந்திய மட்டத்தில் மாணவர்கள் தொழில்நுட்பப் பட்டங்களையும் டிப்ளோமாக்களையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொதுக் கல்வியின் கீழ் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளிநாட்டு உதவிகளின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அவற்றை வெறும் கடன் சுமையாக மாற்றிக்கொள்ளாமல், இந்நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு இணங்கவும் தேவைகளின் அடிப்படையிலும் மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப, தகுதியான பயனாளிகளுக்கே நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன்னுரிமைகளைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர் உதவித்தொகைத் திட்டங்களுக்காக ஜனாதிபதி நிதியம் எப்போதும் தயாராக இருப்பதால், அத்தகைய தேவைகள் குறித்த முன்மொழிவொன்றைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

38 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0