உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட சந்திப்பு.!

78 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச் சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புனர்வாழ்வு) எஸ்.கே. பல்லெதென்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயற்பாடுகள் மற்றும் புலனாய்வு) ஏ.சி. கஜநாயக்க உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் சங்கு கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

பல தசாப்தங்களாகக் காணி உரிமைக்காகப் போராடும் மலையக மக்களின் அவலங்களையும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி சங்கு கலைக்கழகத்தினால் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற வீதி…

44 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற…

61 0 0
இலங்கை செய்திகள்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும். ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக் கொ#லை செய்த கணவன்!

காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொ#லை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த…

64 0 0