உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடியோடு ஒழிக்க அரசு முன்வர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
109 பார்வைகள்

ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்றும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கிய வகிபாகத்தை ஆற்றி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஊடகங்களும், சிவில் சமூகமுமே ஏனைய இரு முக்கிய தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், தற்போதைய அரசு நீதிமன்றத்துக்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுதல் போன்ற செயற்பாடுகள் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால்கள் என்றும் தெரிவித்தார்.

நீதியரசர்களை நியமிக்காது வெற்றிடங்களை வைத்திருப்பது நீதிமன்றத்தின் மீதான மறைமுக அழுத்தமாகும் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உறுதியுடன் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தையும் சீர்குலைக்காது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கூடிய புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும். மக்கள் எமக்கு வழங்கிய ஆணையும் ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே ஆகும். இந்த மக்கள் ஆணையை நிராகரிப்பது, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

61 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

65 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

55 0 0