உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
54 பார்வைகள்

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் வேலணை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளுக்கான கட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக தனித்தனியாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இதனை தெரிவித்த மூத்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

“தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், தேர்தல் பின்னடைவுகளே கூட்டணி பற்றிய சிந்தனைகளை எமது தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.

70 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலே பரந்தளவான தமிழர் கூட்டணி உருவாக காரணமாக அமைந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கூட்டிணைவில் அப்போதைய மலையக மக்களின் தேசியத் தலைவரான சௌ. தொண்டமானும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவரான அஸ்ரப் அவர்களும் இணைந்திருந்தனர். எனினும், அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனைகள் காரணமாக பின்னாட்களில் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அவர்களின் தீர்மானம் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

அதேபோன்று, பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்களும் சந்தர்ப்பவாத தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

எம்மை பொறுத்தவரையில், மக்களின் நலன்களும் அபிலாசைகளுமே முதன்மைக்குரிய விடயங்களாகும். அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0