உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
81 பார்வைகள்

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நீதித்துறை தொடர்பான இந்த அரசின் தன்னிச்சையான போக்கு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத் துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை ரீதியிலான விவாதம் அவசியம். அதை விடுத்து, திடீரென ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.

அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது, வெறும் 8 அல்லது 16 நபர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின், அது ஓர் அப்பட்டமான அரசியல் தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய போக்கு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.

முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முற்பட்டபோதும், பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த மோசமான விளைவுகளை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.

எனவே, அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி, நாட்டின் கல்விமான்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து, இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

49 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

47 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

74 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

60 0 0