உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் வெளிநாட்டவர்களின் வீட்டில் கைவரிசையைக் காட்டிய இளைஞர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
163 பார்வைகள்

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் புலம்பெயர் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடொன்றில் 1,600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பன களவாடப்பட்டுள்ளன.

மற்றொரு வீட்டில் தங்கியிருந்தவர்களின் 400 அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் இலங்கை நாணயத்தாள்கள் என்பனவும் களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால், காரைநகர் பகுதியை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வீடுகளில் களவாடப்பட்ட பணம், நகைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

50 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

44 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

57 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

70 0 0