உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
139 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை (15) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இன்றைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 09 நாட்கள் நடைபெற்றதில், 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும், மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 23ஆம் திகதி வரையிலான 22 நாட்கள் நடைபெற்ற நிலையில், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் முதலாம், இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

50 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

44 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

57 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

70 0 0