உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட பாதுகாப்புப் பிரிவு பொலிஸ்மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் விளக்கமளிக்கையில், “தற்போது நடைமுறையில் உள்ள 2020ஆம் ஆண்டின் ‘2398/26’ இலக்க பொலிஸ் சுற்றறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட ‘அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை’ கோரப்படும். அதனடிப்படையில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரையின் பேரே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும், உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

49 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

47 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

74 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

60 0 0