உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

நாட்டில் சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.!

இலங்கை செய்திகள் 23 மணி நேரம் முன்
77 பார்வைகள்

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இன்று இந்த நாட்டில் சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கே தங்களது கடமைகளைச் செய்ய முடியாத அளவிற்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரைக் கொலை செய்த மோசமான வரலாற்றைக் கொண்ட இந்த அரசாங்கத்திற்கு இவ்வாறான கொலைகள் புதிய விடயமல்ல.

அண்மைக் காலத்தில் நாட்டின் பல இடங்களிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், நாட்டின் வரலாற்றில் மிக அதிகமான கொலைகள் இந்த ஜே.வி.பி / என்.பி.பி அரசாங்கக் காலத்திலேயே இடம்பெற்றுள்ளன.

தற்போது வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வது நிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம், கடந்த காலங்களில் அத்தகைய ஆர்ப்பாட்டங்களைச் செய்து எந்தவொரு அரசாங்கத்தையும் வேலை செய்யவிடாமல் தடுத்தவர்கள் இவர்கள்தான் என்பதால் மட்டுமே.

சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான வசதிக் குறைவுகள் மற்றும் கைதிகளின் அநாவசிய மன அழுத்தம் காரணமாகவே அங்கு தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும், சிறைச்சாலைகளின் உள்ளே இருக்கும் வசதிகள் குறித்து அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை.

தற்போதைய சிறைக்கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்களாவர்.

வெறுமனே சிறையில் அடைப்பதன் மூலம் மட்டும் போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

சிறைகளுக்குள் 3 அல்லது 4 கிராம் போன்ற சிறிய அளவிலான போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய சாதாரண நபர்களே அதிகமாக உள்ளதாக சிறைக்கைதிகளுடனான கலந்துரையாடல்களின் மூலம் அறிய முடிகிறது.

மாறாக, பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பெரிய புள்ளிகள் யாரும் இன்னும் சிறைகளில் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டுக்கு கொண்டுவரப்போவதாகக் கூறி அரசாங்கம் போலியான காட்சிகளை மாத்திரம் நடத்துகிறதே தவிர, நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தில் எந்தவொரு குறைவும் ஏற்படவில்லை என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0