உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

பெற்றோரை கொ*லை செய்த மகன் கைது.!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
63 பார்வைகள்

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 58 வயதுடைய தந்தையும், 54 வயதுடைய தாயும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் உயிரிழந்த தம்பதியரின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0