உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
15 புதன்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

72 பார்வைகள்

5 கிராமுக்கும் அதிகமாக ‘ஐஸ்’ போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி (01) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட வத்தளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர்.

அதேநேரம் அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

இவ்வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் பட்டுள்ளதை உறுதி செய்தார்.

நீதிபதி, கடந்த 01.07.2026 அன்று குறித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம்; பின்னணியில் அநுர அரசு இல்லை.!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…

50 0 0
இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்.!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி…

54 0 0
இலங்கை செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல்.!

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…

62 0 0
இலங்கை செய்திகள்

உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு.!

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது…

69 0 0