உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நோர்வே காற்பந்து அணிக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு

விளையாட்டுச் செய்திகள் 13 மணி நேரம் முன்
89 பார்வைகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியுடன் வெளியேறிய போதிலும், நோர்வே நாட்டின் கால்பந்து அணியினருக்கு அந்தநாட்டு மக்கள் 1 லட்சம் பேருக்கும் மேலாகத் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து நாடு திரும்பிய நோர்வே கால்பந்து அணியினருக்கு, நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள அரச மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நோர்வேயின் மன்னர் ஹரால்டைச் சந்தித்த அணியினர், பின்னர் அரச மாளிகையின் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினர்.

அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் மற்றும் சாண்டர் பெர்கே ஆகியோர், வானூர்திப் பயணத்தில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, ரசிகர்களுடனான இறுதிச் சந்திப்பில் பங்கேற்க முடியாமல் முன்னதாகவே கிளம்பிச் சென்றதாகப் பயிற்சியாளர் ஸ்டேல் சோல்பாக்கன் விளக்கமளித்துள்ளார்.

தோல்வியிலும் அணியின் வீரர்களைக் கொண்டாடும் நோர்வே மக்களின் இந்த ஒற்றுமை, கால்பந்து உலகில் நெகிழ்ச்சியான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலந்து போல தோற்றமளிக்கும் பெண்!

கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலந்து (Erling Haaland) போலவே தோற்றமளிக்கும் அனஸ்தேசியா கோஸ்ட்ரோமிடினா (Anastasia Kostromitina) என்ற ரஷ்ய மொடலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அனஸ்தேசியாவின்…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரஷ்யா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் குழு!

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா அங்குள்ள…

14 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நோர்வே அணி!

உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப்…

13 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக்கிண்ண கால்பந்துத் தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தி சுவிஸ்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கான நொக்-அவுட் சுற்றில் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அபார வெற்றி பெற்று, அடுத்த…

9 0 0