உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரஷ்யா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் குழு!

77 பார்வைகள்

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா அங்குள்ள சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அத்துடன் தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் உள்ள ஒலிம்பிக் பேரவைகளையும் தங்கள் ஒலிம்பிக் குழுவுடன் இணைத்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கு, சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்தது.

இதனால் சர்வதேச ஒலிம்பிக் குழு நடத்தும் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் நேரடியாக பங்கேற்பதில் சிக்கல் உருவானது.

2024-ஆம் ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாடு சார்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் பொதுவான வீரர்கள் என்ற பெயரில் சர்வதேச ஒலிம்பிக் குழு கொடியின் கீழ் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்தது.

இது குறித்து அதன் தலைவர் கிர்ஸ்டி கவென்ட்ரி கூறுகையில், ‘நாங்கள் எந்தவொரு போர் நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. லொஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் தொடங்குவதாலும், இந்த போட்டிகளில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம் என்பதாலும் செயற்குழுவில் ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை நீக்கத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களை, அவர்கள் நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

ரஷ்ய ஒலிம்பிக் குழு மீதான தடை தளர்த்தப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் அதிக அளவில் பங்கேற்க வழிவகை பிறந்துள்ளது.

அதேநேரத்தில் ரஷ்ய வீரர்கள் மீது நிறைய ஊக்கமருந்து சர்ச்சை இருப்பதால் அவர்களுக்கு கடுமையான ஊக்க மருந்து சோதனை நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியின் கீழ் பங்கேற்பது குறித்தோ, போட்டிகளில் அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவது பற்றியோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தடை நீக்கப்பட்டதை ரஷ்ய விளையாட்டு அமைச்சும் வரவேற்றுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழு தடையை நீக்கி இருந்தாலும், தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷ்யாவை தங்களது போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவை மாற்ற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தண்டனைக்குப் பிறகும் தாய்நாட்டிற்காக விளையாடுவேன்: ரொனால்டோ உருக்கம்!

தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

55 0 0
விளையாட்டுச் செய்திகள்

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி : இலங்கையை 82 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20…

48 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெல்பேர்ன் மரதனில் எலியுட் கிப்சோகே புதிய சாதனை!

கென்யாவின் புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் செம்பியனுமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்பர்ன் மரதன் ஓட்டப்போட்டியில் புதிய சாதனையாருடன்…

70 0 0
விளையாட்டுச் செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

109 0 0