உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
148 பார்வைகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவில் உள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0